Friday, 27 February 2009

பொட்டி தூக்கும் பொழப்பு...


பொட்டி தூக்கும் பொழப்பு...

இந்த தலைப்பை பார்த்தவுடன் இது ஏதோ போர்ட்டரை பற்றி ..என நினைத்தால் "நீங்கள் பரிசைப்பெறும் வாய்ப்பை இழக்கிறீர்கள்...இதற்காக Clue வெல்லாம் கேட்காதீர்கள்... நேராக விசயத்துக்கு வருவோம்

இது அதிராம்பட்டினம் மக்களுக்கு மட்டும் அல்ல ..பக்கத்தில் வாழும் பல முஸ்லீம் குடும்பங்களுக்கும் இழைக்கப்பட்ட ஒரு விதமான அநீதி.

இதை எழுத காரணமாக் இருந்தது, உண்மையான சம்பவங்கள், வாழ்கையை தொலைத்தவர்களின் பெருமூச்சு, இன்னும் ஒருமுறை அந்த இளமை வாராதா மற்றுமொருமுறை தான் யார் என்று இந்த சொந்தபந்தங்களுக்கு காட்ட மனதுக்குள் சவால்களை சவ அடக்கம் செய்த பலரின் மனக்குமுறல்.

வெளிநாட்டில் உள்ளவர்களின் வாழ்கை இப்படித்தான் ஆகி விட்டது. சம்பாதிக்கும் காலங்களில் வீட்டில் இவர்களூக்கு பிடிக்கும், அவர்களூக்கு பிடிக்கும் என்று பார்த்து பார்த்து வாங்கிய துணிமணிகள், வாட்ச், சென்ட் இவற்றை கொண்டு சென்று சேர்க்க காண்பித்த ஆர்வம் ...தனது முதுமையை பார்க்க முக்கியத்துவம் தரவில்லை.

விரல் விட்டு [அல்லது விரல் விடாமல்] எண்ணக்கூடிய சிலபேரைத்தவிர நிறைய பேர் நமதூரில் மானத்துக்கு அஞ்சி மெளனமாக தன் வறுமையை மறைப்பதை நான் பார்த்திருக்கிறேன்
ஏன் இந்த சமுதாயம் இப்படி வெளிநாட்டில் கடுங்குளிரிலும் [ சமயங்களில் மைனஸ் டிகிரியில்] கடும் வெயிலிலும் [உம்ரா போனபோது ஒரு 10 ஹேர்ட்ரய்யரை முகத்துக்கு நேராக பிடித்தது போல் உணர்ந்தேன்]..இப்படி கஷ்டப்படுகிற சமுதாயமாக மாற்றப்பட்டது என்று பார்த்தால், அந்த உண்மைக்கு பின்னால் பலர் காரணம் என எனக்கு தோன்றுகிறது.

இது காலாகாலமாக வெளிநாட்டில் குப்பை கொட்டும் நம்மடவர்களைப்பற்றிய சிந்தனை. ஏன் இப்படி'பொட்டி தூக்கும்" என்று எழுதினேன் என்றால்..அப்படித்தான் போய்விட்டது நம் வாழ்க்கை. ஊருக்கு போகும்போது பார்த்து, பார்த்து வாங்குவது..சாப்பிடாமல், ஒரு கையில் செல்போன், மறு கையில் தன்னை உருக்கி சம்பாதித்த பணம்..பொருள்களை கட்டி அடுக்கியபின் வரும் கலைப்பு[முன்பெல்லாம்..ஊர்த்தபால் தான் ரெபரென்ஸ்]

இப்போது நம் ஊர் மக்கள் அமெரிக்கா, லண்டன், ஜப்பான் என்று சிறகுவிரித்தாகிவிட்டது. ஆனால் இவர்கள் மலேசியா,துபாய், சவூதி போன்ற நாட்டில் இருக்கும் நம் ஊர்காரர்களுக்கும் இவர்களுக்கும் அப்படி ஒன்றும் பெரிய வேறுபாடு காண்பிக்கவில்லை.
  1. திருநெல்வேலி மாவட்டங்களில் windmill பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து கொஞசம் டீசன்ட் வாழ்க்கை நடத்தும் மத்தியதர விவசாயமக்கள் ஏன் வெளிநாட்டை நம்பவில்லை. ?
  2. வேற்று இனத்தவர்கள் எப்படி தொடர்ந்து அரசு வேலைகளில் 2, 3 சந்ததியினர் என தொடர முடிகிறது..?
  3. ஒரு சின்ன தோப்பு / ஒன்றிரண்டு குடும்ப கல்யாணம் / இடையில் வரும் மருத்துவ செலவுக்குள் மட்டும் எப்படி என் ஊர்மக்கள் நொந்து போகிறார்கள்?
என்ற சில கேள்விகளை முன்னிருத்தி இப்போது விடை பெறுகிறேன்..இதன் பகுதி 2 ல் சந்திக்கும் வரை ஒருசின்ன BREAK !!!!!!

ZAKIR HUSSAIN

Tuesday, 10 February 2009

COURSES

U.G.COURSES:(AIDED)

SELF FINANCE COURSES:

P.G.COURSES:(AIDED)

Part I Tamil/Arabic

B.Com.,

M.Sc., Chemistry

Part II English B.B.A., M.Sc., Zoology

Part III

B.Sc., Computer Science M.Com

B.A. Economics

B.Sc., Industrial Electronics

RESEARCH COURSES:

B.A. History

B.Sc.,Physics

M.Phil., Commerce

B.B.A.

B.A. English

M.Phil., Chemistry

B.Com.,

B.C.A

M.Phil., Zoology

B.Sc., Chemistry

M.A. Tamil

M.Phil., Computer Science

B.Sc., Computer Science

M.A. English

M.Phil., Management Studies

B.Sc., Mathematics

M.A. Economics

M.Phil.,Economics

B.Sc., Zoology

M.C.A

Ph.D., Commerce

M.Sc., Bio-Chemistry

Ph.D., Chemistry

M.Sc., Computer Science

Ph.D.,Zoology

M.Sc., I.T

M.Sc., Mathematics

M.Sc.,Chemistry

P.G.D.C.A.

Thursday, 5 February 2009

மூட்டை சுமக்கும் பிஞ்சுக்கைகள்


மூட்டை சுமக்கும் பிஞ்சுக்கைகள்

எங்கே போகிறார்கள் இன்றைய பெற்றோர்கள் என்று பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு போய்விட்டது இன்றைய கல்வியும், குழந்தைகள் தூக்கி சுமக்கும் புத்தக மூட்டையும். இது ஏன் திடீர் என்று இவ்வளவு மாற்றம்? [ 20 வருடத்துக்கு முன் இப்படி இல்லையே?..]

தொடர்ந்து வந்த வாழ்க்கைமுறையில் ஒரு மாதிரி குடும்ப பட்ஜெட் எகிரியது ஒரு காரணமாக இருக்களாம், இதனால் வரும் காலத்தில் பிள்ளைகள் எங்கே வாழ்க்கையை எதிர்கொள்ள தகுதியில்லாமல் போய் விடுவார்களோ என்று ஒரு விதமான மாயை உருவாகி விட்டது,

கவனிக்க: இன்றைய தேதியில் வாழ்க்கையின் பட்ஜெட்க்கு தன்னை பிழிந்து பணமாக அனுப்பும் யாரும் இது போன்ற கான்வென்ட்டில் படித்தவர்கள் அல்ல.

இல்லை அந்த கஷ்டம் வேண்டாம் என்றுதான் ஒவ்வொரு கான்வென்ட் வாசலிலும் நிற்கிறோம் எங்கிறீர்களா?...

ஆங்கில அறிவு மட்டும் பிள்ளைக்கு பொறுப்புணர்வை தராது. அதற்க்கு கொஞ்சம் அனுசரனை, அன்பு, நான் பக்கத்தில் இருக்கிறேன் என்ற security conciousness எல்லாம் தேவை.
இப்படியாக விழுந்து விழுந்து படித்த எத்தனையோ விசயஙகளை வெள்ளைக்காரன் இப்போது அவனது வெப்தளத்தில் குறைந்த விலைக்கு கூவி கூவி விற்கிறான். [ உதாரணம்: currency converter, investment calculator, scientific calculator].கொஞ்சம் காலம் ஒடிவிட்டால் அதே இலவசமாக தருகிறேன் என்று ஒரு கூட்டம் விளம்பரத்தில் மின்னும் [Flash advertisement].

நீதி: இன்றைக்கு அதிசயமாக தெரியும் ஒரு கல்வி / கல்வி முறையை வருங்காலத்தில் சேதுரோட்டில் ஒரு ராஜஸ்தான்காரனிடம் கூறு இன்னவிலை என்று நீங்கள் நிர்ணயம் செய்யலாம்.

குழந்தைகளை அது எடுக்கும் மார்க்கை வைத்து அன்பு செலுத்தாதீர்கள். படிப்பதில் அல்லது மார்க் எடுக்கும் விசயத்தில் கண்டிப்பு இருக்களாம் அதுவே உஙகள் அன்புக்கான பண்டமாற்றுமுறையல்ல.

இறக்கும் தருவாயிலும் இஸ்லாம் உன்னுடன் இருக்கவேண்டும் என்று புகட்டுங்கள்.

குழந்தைகள் பெரியவர்களானவுடன் நீங்கள் ஈசி சேரில் அமர்ந்து அவர்களிடம் மனம் விட்டு பேச நிறைய விசயங்களையும் , நிகழ்வுகளையும் சேமியுங்கள்..இப்போது உள்ள "Home works" அதை அழித்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ZAKIR HUSSAIN

Wednesday, 4 February 2009

Khadir Mohideen Hr.sec.School, புளிய மரம்


Khadir Mohideen Hr.sec.School, புளிய மரம்

[This Article was Published in "Adirai Post" earlier---Zakir Hussain]


இந்த புளிய மரம் மட்டும் இன்னும் நவீன காலத்து தாக்கத்தில் இந்நாள் வரை அழியவே இல்லை எனும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது.

போனவருடம் ஊருக்கு போனபோது என் கேமராவை கையில் எடுக்கும்போது என் பள்ளிக்கூட நினைவுகளும் என்னுடன் ஒட்டிக்கொண்டது .80'களின் தொடக்கத்தில் Hr.Sec முடித்த என்னைபோன்ற நிறைய பேருக்கும் இந்த மரத்துக்கும் தொடர்பு இருக்கும். [சமயங்களில் பரீட்சைக்கு படிக்கும்பொது கூட இந்த மரத்தில் ஏறி படித்ததுண்டு, இப்போது மரம் ஏறச்சொன்னால் அப்போதுதான் யாரோ காலை பிடித்து இழுப்பதுபோல் ஒரு paranoid. இதுவரை சுரக்காத "அட்ரலின்" சுரப்பிகள் தனது கடமையை செய்து நிறைய பயத்தை தரும்

இந்த புளிய மரத்துக்காற்றை உல்லிழுக்கும் போது மனதுக்குள் இத்தனை நாள் ஒழிந்திருந்த நினைவுகளும் வெளிப்பட்டது [ Nuerolinguistic].
விளையாட்டுபோட்டிகள், ..மார்ச்/ஏப்ரல் மாதத்து காற்றில் போராடும் அந்த கலர் பேப்பர் கற்றிய கொடி மரம், சுத்தமான வாய்க்காளில் நீந்தும் மீன், பார்க்கும் அளவுக்கு நீரின் தெளிவு [ இப்போது சாக்கடை வாய்க்காலையே மறைத்து விட்டது..உபயம்...... காலேஜ் கேன்டீன்]

பந்து விளையாட்டின்போது வீசிய காற்றில் அடித்த ஜெர்சியின் வேர்வை நாற்றம். ஒட்டப்பந்தயங்களில் உமலில் வாங்கி வந்து தந்த தக்காளிப்பழம், குலுகோஸ்.....ஆடி மாதக்காற்றில் அழகாக பெண்டுலம் எபெக்ட் சுத்தம் செய்து வைத்திருக்கும் கருவை மரத்தின் சின்னக்கோலம்.

வாழ்க்கை ஒட்டத்தில் எத்தனையோ பிரபலங்களை சந்தித்து விட்டாலும் இன்னும் மனதை விட்டு அகலாத சாமாண்யர்கள் , நேனா பாய்[ நெய்னா காக்கா], செல்லாக்காசுகளை சேமிக்கும் இடத்தில்[கப்ரு] தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட அந்த உடல் ஊனமுற்ற அந்த ஸ்கூல் வாட்ச்மேன்.இன்னும் எத்தனையோ...?

பரீட்சை நெருங்கும்போது சீரியஸாக படிக்கும்போது மட்டும் மறவாமல் ஒலிபரப்பாகும் செம்படவர்தெரு வீட்டுக்கல்யாணத்தின் [திரைப்பட்த்தின்] ஒலிச்சித்திரம்..என் காலங்களில் "16-வயதினிலே' "திரிசூலம்"
.......இன்னும் மனதை விட்டு அகலாத எத்தனையோ நிகழ்வுகள்.

HSC முடிந்ததும் [பரீட்சைக்கு முன்னால்] நடந்த Social Break Up ...ஆசிரியர்களை பற்றி இன்னொரு முறை எழுதலாம் என்று சொல்லும் அளவுக்கு விசயங்கள் இருக்கிறது.

என்னுடன் எப்போதும் நடந்து வந்த friends[வகுப்பு மட்டும்] அருகாமையில் ஒரு ராணுவ பலம் இருந்ததாக உணர்ந்தேன்

இக்பால், அஸ்ரப்[சிஙகம் family ] அப்துல் பத்தாஹ், A.H. அமானுல்லாஹ், மீராசாஹிப்[X2], அபுல்கலாம், ரபீக்...எங்கே என்னை விட்டு இவ்வளவு தூரம் போனீர்கள்...?

நாம் எல்லோரும் பூமியில் பணம் தேடி வானத்தில் உள்ள மேகங்களை பார்க்க மறந்து விட்டோம்

Zakir Hussain

என் அன்பிற்கினிய ஆசான்

இக்கட்டுரை நம் பள்ளி தொடர்புடையதல்ல என்றாலும் நம் பள்ளியைப் போன்று புகழ் பெற்ற கிரஸன்ட் பள்ளி தொடர்புடையது. அப்பள்ளியின் முன்னாள் மாணவர் அப்துல் கையூம் அவர்கள் தமது அன்பிற்கின ஆசானை அன்புடன் நினைவு கூர்ந்துள்ளார். நம் பள்ளி முன்னாள் மாணவர்களும் இது போல் நமது ஆசான்களை நினைவு கூரலாமே!

“அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன்திருநாமம் போற்றி துவக்குகின்றேன் அல்லாஹ்”திருவிதாங்கோடு ஈந்த தீந்தமிழ்ப் பாவலனை என் ஆசான் என்று கூறிக்கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. காட்டாற்று வெள்ளமென பெருக்கெடுத்து வரும் அவரது கன்னித்தமிழை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற பாவேந்தனின் பாடலை மெய்ப்பிக்கும் வகையில் அவரது தீந்தமிழ்ப்பேச்சில் தேன்பாகு போன்ற ஒரு இனிமை கலந்திருக்கும்.


இன்று ஒரு மாபெரும் கல்வி நிறுவனமாக கிளைகள் படர்ந்து வண்டலூரில் இயங்கி வரும் கிரசென்ட் பள்ளியின் வரலாற்றுப் பின்னணியை இங்கே நினைவு கூறுவது அவசியம்.1969-ஆம் ஆண்டு என்னையும் சேர்த்து 19 மாணவர்களின் எண்ணிக்கையுடன் துவங்கப்பட்ட பள்ளி அது. பிறைப்பள்ளியிலிருந்து புறப்பட்ட முதல் அணிவகுப்பு நாங்கள்.


சென்னை சேத்துப்பட்டு பகுதியில் ஹாரிங்டன் சாலையில் “நமாஸி வில்லா” என்ற வாடகை வீட்டில்தான் இந்த சுடர்மிகு விடியல் துவங்கியது. ‘காயிதே ஆஸம்’ முஹம்மது அலி ஜின்னா, அல்லாமா இக்பால் போன்ற பெருந்தலைவர்கள் தங்கிச் சென்ற ஒரு பணக்கார குடும்பத்தின் இல்லம் அது.


பேராசிரியர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் என்ற ஒரு மாமனிதரை எங்கள் பள்ளிக்கு முதல்வராக பெற்றது நாங்கள் செய்த அரும்பெரும் பேறு என்றுதான் கூற வேண்டும். அந்த இல்லத்தில் ஒரு பகுதியில்தான் பேராசிரியரின் குடித்தனம். தன் அன்புத்துணைவியார் மற்றும் அருமை மைந்தன் ஜமால் முகம்மதுடன் வசித்து வந்தனர். அந்த அம்மையாரின் கைப்பக்குவத்தில் தயாராகும் அறுசுவை பண்டங்களை பலமுறை சுவைபார்த்த பாக்கியம் என் நாவுக்குண்டு.


ஆறாம் வகுப்பு முதல் மெட்ரிக் வரை - ஆறு ஆண்டுகள் - அந்த மனிதருள் மாணிக்கத்தின் அரவணைப்பில் நாங்கள் வளர்ந்தோம். அது ஒரு குருகுல வாசம் போன்ற அமைப்பு. இருபத்து நான்கு மணிநேரமும் ஒரு தமிழ்க்கடலின் அருகாமையில் இருந்துக்கொண்டு தமிழ்ச்சுவையை பருகிய அனுபவங்களை எழுத்தினில் வடிக்க இயலாது. அரிய மார்க்க ஞானங்களை அவரிடமிருந்து நாங்கள் பெற முடிந்தது.


ஒருமுறை “கவிஞராக” என்ற ஒரு நூலை எனக்கு அவர்கள் பரிசளித்து மரபுக்கவிதை எழுத ஊக்குவித்தார்கள். கவிதை வரிகளைக் கொடுத்து ‘நேரசை’ ‘நிறையசை’ பிரிப்பது எவ்வாறு, ‘தேமா’, ‘புளிமா’ எங்ஙனம் கண்டறிவது என்று பயிற்சி அளிப்பார்கள். பேராசிரியரின் சந்தம் கமழும் பேச்சும், எழுத்தும் என்னுள் தமிழார்வத்தை மென்மேலும் தூண்டி விட்டது.


கவிஞர் கண்ணதாசனின் தலைமையில் கவியரங்கம் ஒன்றினை எங்கள் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தனர். ‘அழுகை’ என்ற தலைப்பில் “மலையழுதால் நதியாகும்; மனமழுதால் கவியாகும்” என்று தொடங்கி “ஈன்ற பொழுதில் தாயழுத கண்ணீரே நாமாகும்” என்று முடிவுறும் என் கவிதையை கவியரசும், பேராசிரியரும் வெகுவாக ரசித்து பாராட்டினார்கள்.


அதே பள்ளியில் தமிழாசிரியராக இருந்து எங்களை ஊக்குவித்த மற்றொரு ஆசான் புலவர் நாஞ்சில் ஷா அவர்கள். ‘நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை வழங்கியவர். நாஞ்சில் ஷாவின் மாண்பினை கவியரசு கண்ணதாசன் இவ்வாறு புகழ்ந்தார்.“நாஞ்சில் ஷா காட்டுகின்றநல்ல நபி நாயகத்தைவாஞ்சையுடன் பார்த்தபின்னர் மற்றவற்றைக் கற்பதற்குக் கடைகடையாய் ஏறிக்கால்வலிக்க நான் நடந்தேன்;


எத்தனையோ அற்புதங்கள்எத்தனையோ அதிசயங்கள்அன்னை ஆமினாஅளித்தமகன் வாழ்க்கையிலே!”இவ்விரண்டு நாஞ்சில் நாட்டு நற்றமிழ் நாவலர்களின் நாவாற்றலில் நான் நனைந்து மகிழ்ந்த நாட்களை நினைவு கூறுகையில் என் நெஞ்சமெலாம் தேனாய் இனிக்கும்.


கல்லூரி முதல்வர் பதவியை துறந்து விட்டு எங்களைப் போன்ற பிஞ்சு மாணவர்களுக்கு பாடம் நடத்த வந்த பேராசிரியரை “பிழைக்கத் தெரியாத மனிதர்” என்றே பலரும் விமர்சித்தனர். அதை அவர் ஒரு பதவி இறக்கமாகவே கருதவில்லை. அதற்கு மாறாக எதிர்கால நட்சத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் முனைப்பாகச் செயல்பட்டார். “உயர்ந்த மலையின் உச்சிப் பனியாய்அமர்ந்த பதவியை அர்ப்பணித்து விட்டுப்பள்ளம் நோக்கிப் பாய்ந்த வெள்ளம்இறையருட் கவிமணி உள்ளம் !அதனாலேதான் ..கல்லூரி முதல்வர் பதவியைத் துறந்துஅரும்பு நிலாக்களை அரவணைப்பதற்கென பிறைப்பள்ளியின் முதல்வர் பொறுப்பைநிறைவுடன் ஏற்று நடத்திக் காட்டினார்.


”பேராசிரியரின் மனோபாவத்தை அறிந்து மனதாரப் புகழ்ந்த அவரது ஆத்மார்த்த ரசிகர் கபூர்தாசனின் வரிகள் இவை. இதனை எழுதிய கவிஞருக்கும் பேராசிரியருக்கும் ஏற்பட்ட ஒரு தெய்வீக நட்பை இங்கே விவரித்தே ஆக வேண்டும். இலக்கிய ஏட்டில் பதிவு செய்யப்பட வேண்டிய சுவையான நிகழ்வு இது. கபிலர் பிசிராந்தையாருக்கிடையே இருந்த நட்புக்கும், ஒளவையார் அதியமானுக்கிடையே இருந்த நட்புக்கும் இணையானது இந்த இலக்கிய பிணைப்பு,


பள்ளி அரையாண்டு விடுமுறையின்போது நான் என் சொந்த ஊர் நாகூர் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது பேராசிரியர் என்னை அழைத்தார்கள். அவர்கள் வசம் கத்தை கத்தையாக கடிதங்கள் இருந்தன. பேராசிரியரின் கவிநடையில் காதல் ஏற்பட்டு மனதைப் பறிகொடுத்த ஒரு ரசிகரின் மடல்கள் அது. பேராசிரியரின் சொல்வண்ணத்தில் சொக்கிப்போய் மதுவுண்ட வண்டாய் ரீங்காரமிடும் கவிநயம் சிந்தும் காதல் கடிதங்கள் அவை. நாளடைவில் இந்த இலக்கியக் காதல் முற்றிப்போய் தன் இயற்பெயரை மாற்றி “கபூர் தாசன்” என்று மாற்றி கொண்டார் அந்த ரசிகர்.


“தம்பி! நீ உன் ஊருக்கு அருகாமையிலிருக்கும் காரைக்காலுக்குச் சென்று இந்த முகவரியில் இருக்கும் நபரைச் சென்று சந்தித்து வா!” என்று என்னை பணித்தார்கள். நான் நேரில் சென்று விசாரித்தபோது அந்த வாசகரின் இயற்பெயர் செ.மு.வாப்பு மரைக்காயர் என்று தெரிய வந்தது. நான் கபூர் சாகிப்பிடமிருந்து வந்திருக்கும் மாணவன் என்று என்னை அறிமுகம் செய்தபோது அவர் முகத்தில் ஏற்பட்ட பூரிப்பை பார்க்க வேண்டுமே! தன் ஆத்மார்த்த நாயகனிடமிருந்து வந்த தூதுவனாக என்னைக் கண்ட மாத்திரத்திலேயே உணர்ச்சிவசப்பட்டுப் போனார். பேராசிரியரின் உடல்நலம் குறித்து விசாரித்து அவரது சொல்லாற்றலைப் புகழ்ந்து மணிக்கணக்காக பேச ஆரம்பித்து விட்டார். பாரதிக்கு ஒரு தாசன் பாரதிதாசனைப் போன்று, அந்த பாரதிதாசனுக்கும் ஒரு தாசன் சுப்பு ரத்தின தாசன் (சுரதா) போன்று இந்த கபூர்தாசனின் குருபக்தி கண்டு வியந்துப் போனேன்.


பிறைப்பள்ளியில் எங்களுக்கு தமிழ் பாட வகுப்பு முதல்வரே நடத்துவார். தமிழ் வகுப்பு என்றாலே எங்களது உற்சாகம் பன்மடங்காகும். அந்த கம்பீரத் தோற்றம், அடுக்குத் தொடரில் அதறும் தொனி, அடலேறு போன்ற ஒரு மிடுக்கு, கடல் மடை திறந்தாற்போல் ஊற்றெடுக்கும் அந்த அருந்தமிழ் நடை, கேட்போரை கிறுகிறுக்க வைக்கும்.


“அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்உடையான் சடையன்” - என்று சடையப்ப வள்ளலைப் புகழும்போதும்“உமறு குமுறிடில் அண்ட முகடும் படீரென்னும்உள்ளச்சம் வையும் பிள்ளாய்” - என்ற உமறுப் புலவரின் உரையை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கும் போதும் சிங்கத்தின் கர்ஜனையை கேட்பது போலிருக்கும்.


தபலா அதிர்வு போலத்தாளம் பிசகாக் கதியில்சபையில் ஒலிக்கும் பேச்சில் – கபூர்சந்தனம் கமழச் செய்வார் - என்று பொருத்தமாகப் பாடுவார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்“செந்தமிழுக்கு ஒரு சேதுப்பிள்ளை” என்பதைப்போல் “அழகுத் தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என்று பேராசிரியரின் பெருமையை பறைசாற்றுவோர் உண்டு.


பேராசிரியரைப் பற்றி குறிப்பிடுகையில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுவார் :

“திகழும் அவர் கவிதையில் தேமா, புளிமா!

ஆனால் அப்துல் கபூரோஆமா எவர்க்கும் போடாத அரிமா!


எங்கள் முதல்வர் எழுதி நாங்கள் தினமும் இறைவணக்கப் பாடலாக பாடிக் கொண்டிருந்த “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்” என்ற பாடலை இசைத்தட்டாக வெளியிடும் நாட்டம் வந்தது. நாகூர் ஹனீபா அவர்கள் ஐந்து மாணவர்களைத் அவர்களுடன் சேர்ந்து சேரிசை (‘கோரஸ்’) பாட தேர்ந்தெடுத்தார்கள். அந்த ஐந்து மாணவர்களில் நானும் ஒருவன் என்பது எனக்கு பெருமையைச் சேர்த்தது. “ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்” பதிவரங்கத்தில் ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக ஒலிப்பதிவு நடந்துக் கொண்டிருந்தது.


“இம்மை வாழ்வின் சோதனையில்

இதயப் பொறுமை தந்திடுவாய் !

வெம்மை நெருப்பை விட்டெம்மை

விலக்கித் தடுத்துக் காத்திடுவாய் !

செம்மை பொழியும் சுவனத்தின்

செழிக்கும் இன்பம் ஈந்திடுவாய் !

எம்மை நல்லோர் நற்குழுவில்

என்றும் சேர்ப்பாய் இனியோனே !”

என்று அந்த வெண்கலக் குரலோன் இசைமுரசு இசைக்க நாங்களும் சேர்ந்து பாடினோம். இவ்வரிகளின் கருத்தாழத்தை செவிமடுத்த இந்து மதத்தைச் சார்ந்த இசையமைப்பாளரின் கண்கள் பனித்து விட்டன. “எத்தனை சக்தி வாய்ந்த வார்த்தைகள் இவைகள்?” என்று செயலிழந்துப் போனார்.


தமிழக கல்லூரி வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு தமிழ்ப் பேராசிரியர் கல்லூரி பேராசிரியராக பணி ஏற்றது கபூர் சாகிப்தான். உருது மொழியில் நடைபெறும் “முஷாயிரா” போன்று தமிழ்மொழியில் “கவியரங்கம்” என்ற பெயரில் இன்று நாடெங்கும் நடைபெறும் வழக்கத்தை வாணியம்பாடியில் முதன் முதலில் அறிமுகம் செய்த பெருமையும் அவர்களைத்தான் சாரும்.


தமிழில் உரை அலங்காரத்திற்கும், நடை அலங்காரத்திற்கும் புகழ் பெற்றவர் அறிஞர் அண்ணா. பேராசிரியர் எழுதிய ‘இலக்கியம் ஈந்த தமிழ்’ என்ற நூலின் முதற்கட்டுரையை அதில் காணப்பட்ட செந்தமிழ் நடைக்குவேண்டி தன் “திராவிட நாடு” பத்திரிக்கையில் வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்தார்.


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன், மதியழகன் ஆகியோருடன் ஏற்பட்ட நெருக்கம் பிற்காலத்தில் ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’ என்று தமிழ் மறுமலர்ச்சி பூண்டபோது அவர்களை நாடறிந்த நற்றமிழ் பேச்சாளராக தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அடையாளம் காண்பித்தது.


கழகத் தலைவர்களில் ஒருவரான சாதிக்பாட்சா பேராசிரியரின் மாணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.இறையருட் கவிமணி அவர்கள் பன்மொழியில் புலமை பெற்றிருந்தார்கள்.


தமிழ், மலையாளம், அரபி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர்கள் அடைந்திருந்த திறன் அளவிடற்கரியது. தக்கலையில் இஸ்லாமிய ஆராய்ச்சி நிலையம் நிறுவி இறுதி மூச்சுவரை இலக்கியத் தொண்டாற்றி வந்தார்கள்.


பலகாலம் முன்பு ஒரு நோன்பு பெருநாளின்போது அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த மடலொன்றை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். உள்நாட்டு அஞ்சலில், மூன்றே மூன்று வரிகளில் கச்சிதமாக தட்டெச்சு செய்யப்பட்ட வாழ்த்து அது:


ஈகைத் திருநாள்இன்பம் தருக;இறையருள் பொழிக !


அந்த காவிய நாயகனின் நினைவுகள் அலைமோதும் போதெல்லாம் இந்த அஞ்சல் வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பேன். நிறைவான வாழ்வை வாழ்ந்து இறைவனடிச் சேர்ந்த ஆசானின் நினைவுகளில் என் கண்கள் குளமாகிப் போகும்.- அப்துல் கையூம்


நன்றி: abdulqaiyum.wordpress.com

Monday, 2 February 2009

இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர்


கா.அப்துல் கபூர்

கா.அப்துல் கபூர்
இறையருட் கவிமணி
__________________________________________

1946 - 1947

பேராசிரியர், தமிழ்த்துறை,
முஸ்லிம் அரசினர் கல்லூரி, சென்னை

1947 - 1952
தமிழ்த்துறைத் தலைவர்,
இஸ்லாமியக் கல்லூரி, வாணியம்பாடி

1952 - 1956
கீழ்த்திசை மொழித்துறைத்தலைவர்,
ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சி

1956 - 1962
தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி முதல்வர்,
ஹாஜி கருத்த இராவுத்தர் கெளதிய்யா கல்லூரி, உத்தம பாளையம்




1962 - 1967

தமிழ்த்துறைத் தலைவர்,

கல்லூரி முதல்வர்,

காதிர் முஹ்யத்தீன் கல்லூரி,

அதிராம்பட்டினம்





1967 - 1974

முதல்வர்,
பிறைப் பள்ளி, வண்டலூர், சென்னை

1976 - 1980
நிர்வாக அதிகாரி,
அல்-அமீன் உயர்நிலைப்பள்ளி, கும்பகோணம்

நிர்வாக அதிகாரி,
திராவிட மொழி இயல் நிறுவனம், திருவனந்தபுரம்

வகித்த பிற பொறுப்புகள்:
  1. தமிழ்ப் புலவர்க்குழு உறுப்பினர்
  2. மதுரை, தஞ்சை மாவட்ட இலக்கிய ஆட்சிக்குழு உறுப்பினர்
  3. திருச்சி அகில இந்திய வானொலி நிலைய ஆலோசனைகுழு உறுப்பினர்
  4. சென்னை பல்கலைக்கழக பாடநூல் உறுப்பினர்

காதிர் முகைதீன் கல்லூரியில் மீலாது நபி விழா

காதிர் முகைதீன் கல்லூரியில் மீலாது நபி விழா !

SM.ஹிதாயத்துல்லாஹ் பங்கேற்பு!!